தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 28ஆம் தேதி காலை உடன் ஊரடங்கு முடிய போகிறது என்பதால் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து விசாரித்த பொழுது முக்கியமான தளர்வுகள் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோணா பாதிப்பை கணக்கில் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது. முதல் வகை கொண்ட 11 மாவட்டங்கள் எந்தவிதமான தளர்வு களும் போன ஊரடங்கி அறிவிக்கப்படவில்லை. இரண்டாம் வகையில் இடம்பெற்றிருந்த 23 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் வகை மூன்றில் இடம்பெற்றிருந்த நான்கு மாவட்டங்களுக்கு பல்வேறு தரவுகளுடன் கூடிய போக்குவரத்து தளர்வுகளும் கொடுக்கப்பட்டது.
ஹார்டுவேர் ,மின்னணு பொருட்கள், விற்பனை கடைகள் புத்தகக் கடைகள், காலனி, வீட்டு உபயோகப் பொருட்கள், கண்ணாடி கடைகள், ஆகியவை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மூன்றாவது வகையான நான்கு மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 28-ஆம் தேதி காலை முதல் அமலுக்கு வர உள்ள புதிய தளர்வுகள் குறித்து விசாரித்தபோது முக்கிய தகவல்கள் கிடைத் துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது பின்பற்றப்படும் தளர்வுகள் 23 மாவட்டங்களுக்கு கொடுக்கப்படும் என்றும், அந்த 23 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து இயக்கப்படும் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடைகள் திறக்கும் நேரமும் அதிகரிக்கப்படும். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களை தவிர்த்து பிற மாநிலங்களில் இம்முறை சிறிய அளவிலான நகை கடைகள், துணிக்கடைகள், திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் சிறிய அளவிலான வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
11 மாவட்டங்களுக்கு இம்முறை பலவகையான தளர்வுகள் இருப்பினும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது என்று வட்டாரம் சொல்கிறது.