மன அழுத்தத்தினால் பலவகையான உடல்நல பாதிப்புகள் நமக்கு ஏற்படக்கூடும், உதாரணமாக தலைவலி, பய உணர்வு, செரிமான பிரச்சனை, தூக்கமின்மை, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பலவித பிரச்சனைகள் மன அழுத்தத்தினால் ஏற்படுகிறது. உணவே மருந்து என்பது போல நாம் சாப்பிடக்கூடிய சில வகை உணவுகள் நம்முடைய மன அழுத்தத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, இப்போது நமது மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியாக மாற்றக்கூடிய உணவு வகைகளை பற்றி இங்கே காண்போம்.
1) டார்க் சாக்லேட் சாப்பிட்ட இரண்டு நாட்களில் உங்களுக்கு நல்ல பலன் தெரியும், இது உங்களது மனநிலையை நன்கு மாற்றும். டார்க் சாக்லேட்டில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர் ஏஜெண்டாக செயல்படுகிறது. இந்த வகை உணவில் தேவையற்ற உபரி சர்க்கரை கிடையாது அதனால் இதை தைரியமாக சாப்பிடலாம்.
2) இரவு தூங்குவதற்கு முன்னதாக வெதுவெதுப்பான பால் குடிப்பது உங்களது மன அழுத்தத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை குடிக்கும்பொழுது உங்கள் உடலுக்கு ஒருவித ஆறுதல் கிடைக்கும், மேலும் இதில் நிறைந்துள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உங்கள் உடலின் எலும்புகளை வலுப்படுத்துவதோடு, உங்கள் மனதையும் அமைதிப்படுகிறது.
3) பொதுவாக நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இது உங்கள் வயிற்றுக்கு நன்மையை அளிப்பதோடு, உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவது உங்கள் மனதுக்கும், உடலுக்கு நன்மைபயக்கும்.
4) நட்ஸ் வகைகளில் அதிகளவு நல்ல கொழுப்புகளும், மெக்னீசியம் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது. மனஅழுத்தத்தை குறைக்க இந்த நட்ஸ் வகைகளை நீங்கள் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். பாதாம், ஆளி விதைகள், பிஸ்தா, சூரியகாந்தி விதைகள் மற்றும் வால்நட்ஸ் போன்றவை சிறந்த உணவுகளாகும்.
5) முழு தானியங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக தூண்டப்பட்டு உங்கள் மன நிலையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். இதனை சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகுவது, உடல் சுறுசுறுப்பாக செயல்படுவது மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஊக்குவிக்க உதவுகிறது.