என்னங்க லோகேஷ் நீங்களுமா இப்படி!!  பல மாதங்கள் கழிந்து வெளிவந்த உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
36
What are you like Lokesh!! Fans are shocked by the fact that it came out after many months!!
What are you like Lokesh!! Fans are shocked by the fact that it came out after many months!!

என்னங்க லோகேஷ் நீங்களுமா இப்படி!!  பல மாதங்கள் கழிந்து வெளிவந்த உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூரியா ஆகியோர்களின் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை பற்றி உண்மை ஒன்று சில மாதங்கள் கழிந்து இப்பொழுது தெரியவந்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குநர்களின் பட்டியலில் முக்கியமான இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் பகத் பாசில் மூன்று பேரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியா அவர்கள் கடைசி சில நிமிடங்கள் வந்து திரையரங்கையே அதிர வைத்திருப்பார்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசையும் விக்ரம் படத்திற்கு பலமாக இருந்தது. உலக அளவில் பாக்ஸ் உபிஸ் கலக்சனில் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் வெளியான ஒரு வெப் தொடரில் இருந்து காப்பியடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விக்ரம் திரைப்படத்தின் கதை நேர்மையாக இருக்கும் மகனை வில்லன்கள் சேர்ந்து கொலை செய்துவிட தன் மகன் கொலைக்கு காரணமானவர்களை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பழிவாங்குவது போல காட்டப்பட்டிருக்கும். இதே கதை 2015ல் வெளியான ஆங்கில வெப் தொடரான பெட்டர் கால் சாவுல்(Better Call Saul) என்ற வெப் தொடரின் கதைக் களமும் மகனை கொலை செய்தவர்களை பழிவாங்கும் தந்தை போலத்தான் இருக்கும்.

இதனால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் படத்தின் கதையை அந்த வெப் தொடரில் இருந்துதான் காப்பியடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அட்லியை விட பெரிய திருடன் போலயே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.