என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

Photo of author

By Parthipan K

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

Parthipan K

What atrocity is this? Two young people got married in Salem!!

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற  இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு  பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள்.

கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர்   அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதைக் குறித்து அவர்களிடம் கேட்டபோது ?நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் காதலித்து வந்தோம். நெருங்கி பழகியும் வந்தோம்.நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து மோதிரம் மாற்றிக் கொண்டோம்.

பின்னர் தாலி கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்ட கார்த்திக் அவர் ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணா தாலி கட்டினார். எங்கள் திருமணத்திற்கு யாராவது தடையாக இருப்பார்களோ அல்லது உறவினர்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்குள்ளே இருந்து வந்தது. இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எங்களின் உயிரான நண்பர்கள் தான்.

இவர்களை எல்லாம் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.திருமணம் நடந்த பொழுது எங்கள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என அவர்கள் கூறினார்கள். மேலும் இவர்களது திருமணத்திற்கு முகநூல்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.