பாரதி கண்ணம்மா வில்லி செய்த காரியம்!! அசிங்கமாக தீட்டிய ரசிகர்கள்!!
பொதுவாகவே சின்னத்திரையாக இருந்தாலும் வெள்ளித்திரையாக இருந்தாலும் அதற்கு முக்கியமான கதாபாத்திரமாக இருப்பது வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை வைத்து தான் கதையின் ஆரம்பமும் முடிவும் இருக்கும். மேலும் இந்த வில்லன் மற்றும் வில்லி கதாபாத்திரம் தான் அதிக அளவில் விமர்சனங்களை பெரும்.
அவர்கள் கதாப்பாத்திரத்திற்காக மட்டுமே நெகட்டிவ் ரோலில் நடிப்பார்கள். ஆனால் அவர்களை ரசிகர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். ஒரு சில வில்லன் மற்றும் வில்லிகள் அதை எதிர்த்து சமாளித்து வருவர்கள். ஆனால் சில அதை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.
இந்த நிலையில் விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் கண்ணம்மா சீரியலின் வில்லி கதாபாத்திரம் ஆனால் வெண்பா கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. அவரின் நிஜவாழ்க்கை பெயர் ஃபாரின் ஆகும். இவர் தற்போது நிஜவாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதற்காக அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
இந்த நிலையில் இவர் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் பெருமளவில் திட்டி வருகின்றார்கள். அப்படி என்ன புகைப்படம் என்றால் கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் மெஹந்தி வரைந்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்க்கு தற்போது அவரின் ரசிகர்கள் கடும் அளவில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்திற்கு ஒரு சிலர் வாழ்த்துக்கள் கூறி வந்தாலும் ஒரு சிலர் இந்த நேரத்தில் உங்களுக்கு இப்படி ஒரு மோசமான புகைப்படம் தேவையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு சின்னத்திரை நடிகை ஃபாரினா உடலமைப்பைப் அசிங்கமாக பார்ப்பது நீங்கள் தான் என்ற பதிலடி கொடுத்து வருகிறார்.