AMMK: அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்ததிலிருந்து கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் என பாஜக கூறுகிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா கூட இதையேதான் தெரிவித்தார். அச்சமயம் அதிமுகவில் அனைவரது கவனமும் எடப்பாடி நோக்கி இருந்தது. எங்களுக்கே தெரியாமல் ஏதாவது மறைமுக உறுதி கொடுத்து விட்டீர்களா?? ஏன் பாஜக கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர் என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
எடப்பாடியும், அவர்கள் கூறுவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது அதிமுக தலைமையில் தான் ஆட்சி என விளக்கம் அளித்து வருகிறார். இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், அமைச்சரவையில் கூட்டணி உண்டாகும் என தெரிவித்துள்ளார். அதன்படி முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆலோசனை செய்து தான் கூறுவார்கள். இது குறித்து நான் ஏதும் சொல்லத் தேவையில்லை. அமித்ஷாவே சொல்லிவிட்டார்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறியது அதிமுக கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சரவையில் கூட்டணி எனக் கூறினால், அதிமுகவுடன் கைகோர்க்க நேரிடும். இதனால் எடப்பாடி கொந்தளிப்பில் உள்ளார். இப்படியே கூட்டணி முறையில் ஆட்சி என பாஜக கூறி வந்தால் கட்டாயம் அதிமுக வெளியேறிவிடும் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி டிடிவி தினகரன் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் சரிவரும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறுவது இவர்களுக்கு அடுத்து மோடி தான் சரியானவர் வேறு யாரும் கிடையாது என்பதை உணர்த்தும் படி உள்ளது.