அரசுதவி பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்ன செய்தீர்கள்? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Photo of author

By Parthipan K

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் இடமாற்றம் செய்வது குறித்தான வழக்குகளை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் உத்தரவானது,

அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத பள்ளிகளின் கல்விநிலை மற்றும் நிர்வாக நிலை பற்றியது அல்லாமல் பணியாளர்கள் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசவும், அதனை சரி செய்ய தமிழக அரசிடம் ஏதாவது ஒருங்கிணைந்த சட்டம் உள்ளதா? என்றும் கேள்வி எழுகிறது.

தமிழகத்தில் இதுவரை தனியார் பள்ளிகளின் ஒழுங்குமுறைச சட்டம் 1973 மற்றும் அது பற்றிய விதிகள் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த சட்டமும் தமிழகத்தில் இல்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசின் நேரடி உத்தரவுகள் மற்றும் நிர்வாக உத்தரவுகள் மட்டுமே பிறப்பித்து செயல்படுத்தி வருகின்றன. மேலும் தேவைக்கேற்ப சில சமயங்களில் பிரச்சனைகளுக்கு ஏற்பவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தவிர்த்து தனியார் பள்ளிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அரசானது ஒருங்கிணைந்த சட்டம் ஏதாவது ஏற்பாடு செய்ய முடிவெடுத்ததா? என்று நீதிமன்றங்கள் அறிய முற்படுகின்றன.

மேலும் இந்த வழக்கில் விசாரிக்கும்போது, தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே என்றால், தமிழக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கும் மொழியாக மாறிய பள்ளிகள்(english medium), அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளையும் சரிசமமாக பயிற்றுவிக்கும் மொழியாகக் கொண்ட பள்ளிகள் அல்லது வேறு மொழி கலந்து கற்பிக்கும் பள்ளிகளுக்கு அரசு மானியம் கொடுப்பதில் மாற்றுக்கருத்து ஏதேனும் உள்ளதா? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பதில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதனை அரசின் தலைமைச் செயலாளர் அல்லது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் யாராவது அந்த அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையினை இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், மேலும் காலம் தாழ்த்த அவகாசம் கேட்க கூடாது எனவும், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அரசு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்க அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.