Green dot food products in Tamil: நாம் வாங்கும் பொருட்களில் ஏன் இந்த சிவப்பு மற்றும் பச்சை புள்ளி உள்ளது தெரியுமா?

Photo of author

By Priya

Green dot food products in Tamil: மனித அன்றாட வாழ்க்கையில் அடிப்படையாக இருப்பது என்னவென்றால் அது, உணவு, உடை, இருப்பிடம். நம் அன்றாட வாழ்க்கையில் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்தும் என்பது கவனிக்கதக்க ஒன்றாகும். ஏனெனில் நம்முடைய ஆரோக்கியத்தை பிரதிபலிப்பது உணவு தான். அதனால் தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு நாளைக்கு உண்ணும் 3 வேளை உணவுகளிலும் கவனம் செலுத்துகிறான்.

உணவு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் உணவு பிரியர்களை எடுத்துக்கொண்டால் தங்களின் வாழ்நாளில் அனைத்து உணவுகளையும், ருசி பார்த்திட வேண்டும் என்பது தான் கொள்கையாக இருக்கும். அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் நபருக்கு நபர் யூடியூப் சேனல் ஆரம்பித்து புட் ரிவ்யூ என்று அனைத்து கடைகளுக்கும் சென்று உணவை ருசி பார்த்து அந்த உணவை பற்றி ஒரு சில கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அவர்களின் கருத்தை கேட்டு நாம் அங்கு சென்று அந்த உணவை சாப்பிடுவோமோ இல்லையோ! ஆனால் நிச்சயம் அவர்களின் வீடியோக்களை பார்த்து கொண்டிருப்போம். நமது நாட்டில் உணவு பழக்கவழக்கங்களில் ஒரு சிலர் சைவ உணவுகளையும், மற்றவர்கள் அசைவ உணவுகளையும் சாப்பிடக்கூடியவர்கள்.

இவ்வாறாக இருக்கையில் சைவ உணவு சாப்பிடுவர்கள் சிலர் அசைவம் கலந்துள்ள உணவு பொருட்களை விரும்ப மாட்டார்கள். சைவ உணவுகளை உண்ண உணவகங்களிலும் நாம் சாப்பிடும் போது இதில் அசைவம் கலந்துள்ளதா? என கேட்போம். ஆனால் நாம் அன்றாட பயன்படுத்தும் உணவு பொருட்களில் அசைவம் எது? சைவம் எது? என்று நம்மால் எப்படி கண்டுப்பிடிக்க முடியும்.

சிவப்பு மற்றும் பச்சை வண்ணப் புள்ளிகள்

நம் கடைகளில் வாங்கும் பேக் செய்யப்பட்ட உணவு சம்பந்தப்பட்ட பொருட்களில்  சதுரமான கட்டத்தில்  சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் வட்டம் பொறிக்கப்பட்டிருக்கும்.

பச்சை வண்ணத்தில் உள்ள சின்னம் இது முழுவதும் “சைவம்” என்றும் அசைவம் சேர்க்கப்படவில்லை என்பதை குறிக்கிறது. சிவப்பு நிறத்தில் உள்ள சின்னம் “அசைவம்” கலந்துள்ளது என்பதை விளக்குகிறது.

இதில் அசைவம் என்பது பறவைகள், கடல் உயிரினங்கள், விலங்குகள், முட்டை போன்றவற்றை மூலப்பொருட்களாக அல்லது பகுதியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்த்து.

சைவம் என்பது அசைவத்தை தவிர்த்து சேர்க்கப்பட்ட அனைத்து பொருட்களும் அடங்கும்.

ஒரு நுகர்வோருக்கு அவர்கள் வாங்கும் பொருட்கள் சைவம் அல்லது அசைவம் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு இந்த புள்ளிகள் கட்டாயமாக பொறிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: Palm Fruit in Tamil: கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.. பலன் தரும் பனம்பழம்..!!