என்ன கைகள் அவருக்கு மட்டும் தான் இருக்கா? எங்களது பூ பறிக்கவா? சீமானுக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு 

0
212

என்ன கைகள் அவருக்கு மட்டும் தான் இருக்கா? எங்களது பூ பறிக்கவா? சீமானுக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு 

நாம் தமிழர் கட்சி சீமானின் பேனா சிலை குறித்த பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் திருக்கோவிலில் ராஜகோபுரம் உட்பட பல்வேறு சீரமைத்தல் பணிகளை இந்து அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது,

அருள்மிகு கங்காதரேஸ்வர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை அடுத்த எட்டு மாதங்களில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும்.

திமுக ஆட்சியில் மட்டும்தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை கோவிலின் திருப்பணிகளுக்கு முழுமையாக உபயோகப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயோதாரர்கள் மூலமாக 600 கோடி வரை  திருக்கோவில்களுக்கு நன்கொடை வந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் பதிவாகின. அதில் பேசிய சீமான் நீங்கள் கடற்கரையில் பேனாவை வையுங்கள் ஒருநாள் வந்து உடைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

பேனா சிலை குறித்து சீமானின் பேச்சு பற்றி அமைச்சர் சேகர்பாபு விடம் கேட்டபோது அவர்,  சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்களது கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? கை அவருக்கு மட்டும் தான் இருக்கா? எல்லோருக்கும் கை இருக்கு. இந்த பதிலே அவருக்கு போதுமானது என்று தெரிவித்தார்.

 

Previous articleஇந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!!
Next articleவரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!