சேலத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ். அவருக்கு 21 வயது. இவர் அதே பகுதியில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டர் ஆக வேலை செய்து வருகிறார். தனுஷ் இந்த தொழிலுக்கு வருவதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அவர்களது உறவினர் வைத்த பேக்கரியில் வேலை செய்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய காவியா என்பவரை காதலித்து பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் சேலத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காவியாவின் வளைகாப்புக்கு தனது பெற்றோர்கள் வர வேண்டும் என அழுத்தமாக கூறியிருந்தார். இதற்குக் காரணம் திருமணத்திற்கு பிறகு காவியாவின் பெற்றோர்கள் அவர்களின் வீட்டிற்கு வரவில்லை என்பது ஆகும். இந்த நிலையில் காவியாவின் வளைகாப்புக்கு நேற்று முன்தினம் அவர்கள் பெற்றோர்கள் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்கள். தனது பெற்றோர் முதல் முறையாக தனது வீட்டிற்கு வருவதால் நாமே நேரில் சென்று அவர்களை அழைத்து வர வேண்டும் என தனுஷிடம் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து நேற்று வளைகாப்பு வேலையும் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது பெற்றோரை அழைத்து வர இருவரும் பைக்கில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் செல்லும்போது சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இறங்கும் இடத்தில் காவியா கீழே தவறி விழுந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் வண்டியை நிறுத்தி என்னவென்று பார்க்கும்போது காவியாவின் துப்பட்டா பைக் சக்கரத்தில் மாட்டி கீழே விழுந்து அவரின் பின்புற தலை பகுதியில் பலத்த காயம் அடைந்திருந்தது. இதனை பார்த்த தனுஷ் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் காவியாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் வேதனையில் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.