லுங்கியுடன் பாரதி கண்ணம்மா வீட்டில் நடந்தது என்ன?? நாளுக்கு நாள் அதிர்ச்சி!!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இதன் கதை பணக்கார வீட்டு பையன் ஏழை வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். மேலும் அந்த ஏழை மருமகளை பணக்கார வீட்டு மாமியாருக்கு பிடிக்கவில்லை. இதனால் தன் புகுந்த வீட்டில் வேலைக்காரியைப் போல் தோற்றம் அளிக்கிறாள் கண்ணம்மா. சில வருடங்களுக்கு பிறகு அவளின் மாமியார் அவள் பக்கம் சாய்ந்து விட்டார். இது போல எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் திடீர் திருப்பமாக நடந்ததை பார்த்த ரசிகர்களின் கவனம் இந்த சீரியல் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. அந்தத் திருப்பம் என்னவென்றால் சில குழப்பத்தினால் தன் காதல் மனைவியை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறான் பாரதி.
மேலும் வீட்டை விட்டு நிறை மாத கர்ப்பிணியாக வெளியே செல்லும் கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தையை பாரதியின் தாய் தன் வீட்டிற்கு எடுத்து வந்து விடுகிறாள். இன்னொரு குழந்தையை கண்ணம்மாவே வளர்க்கிறாள். ஆனால் கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது என்று பாரதியின் தாயைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் தத்து எடுத்து வந்த குழந்தை போல தன் வீட்டில் வைத்து பாரதி இடம் கொடுத்து வளர்கிறாள். இதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு நாடகத்தை கடந்து செல்கின்றனர். இதில் இரண்டு குழந்தைகளுமே தனித்தனியாக வளர்க்கின்றனர். இந்த நிலையில் பாரதியிடம் வளரும் குழந்தை கண்ணம்மாவை சந்திக்கிறது. மேலும் அந்த குழந்தை கண்ணம்மா இடம் நெருங்கி பழகுவது பிடிக்காமல் பாரதி அந்த குழந்தையை அமெரிக்கா அழைத்து செல்ல முடிவெடுக்கிறான்.
இந்த நிலையில் அமெரிக்கா செல்லும் வழியில் பாரதியின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். குழந்தை கண்ணம்மாவை பார்க்கவேண்டும் என்று சொல்கிறது. இதனால் அவரின் குழந்தைக்காக தன் பரம விரோதியான காதல் மனைவிகண்ணம்மாவை கூட்டி வர செல்கிறான் பாரதி. இந்த நிலையில் தற்போது கண்ணம்மா, பாரதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்ணம்மாவும் பாரதியும் ஒன்று சேர்ந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்தப்படம் அடுத்து நடக்கப் போகும் படப்பிடிப்பிலிருந்து வெளியானது ஆகும்.