Breaking News, Cinema

கேரள முதல்வர் சிவகார்த்திகேயனுக்கு செய்த சம்பவம்!! இப்படி ஒரு அதிர்ஷ்டமா!!

Photo of author

By Gayathri

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கி தன்னுடைய திறமையால் சினிமாவில் நுழைந்த சிவகார்த்திகேயன் குழந்தைகளின் மனதில் பெரிதளவு இடம் பெற்று அதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் அஜித் அளவிற்கு பேசப்படக்கூடிய நடிகராக உருவெடுக்க தொடங்கியிருக்கிறார். அதிலும் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழகத்தில் மட்டுமல்லாது கேரள மாநிலத்திலும் அதிக அளவு ரசிகர்களை பெற்ற நடிகராக சிவகார்த்திகேயன் விளங்கி வருகிறார்.

குறிப்பாக அமரன் திரைப்படத்தில் கேரள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை கதையை திரைப்படமாக நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததோடு அது சிவகார்த்திகேயனின் நடிப்பு மிகவும் போற்றக்கூடியதாகவே அமைந்திருந்தது. இதே காரணத்தால் தான் கேரள மாநிலத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் பிரபலமாக இருக்கிறார். பிரபலமானது மட்டுமல்லாது கேரள மாநிலத்தின் முதல்வர் பிரனாயி அவர்களுடன் அவருடைய வீட்டில் தடபுடலான விருந்து உணவை சிவகார்த்திகேயன் சாப்பிட்டு இருப்பது தற்பொழுது பேச்சுப் பொருளாகி இருக்கிறது.

காரணம், தமிழக முதல்வரோடு நெருங்கிய உறவில் இருந்தாலும் இதுவரை தமிழக முதல்வர் வீட்டிற்கு கூட விருந்திற்காக சிவகார்த்திகேயன் செல்லாத நிலையில் கேரள முதல்வர் அவருடைய இல்லத்திற்கு அழைத்து சிவகார்த்திகேயனருக்கு விருந்து வைத்திருப்பது ரசிகர்களிடையே மட்டுமல்லாது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள முதல்வரின் வீட்டில் உணவு விருந்து சாப்பிடக்கூடிய இரண்டாவது தமிழ் நடிகராக சிவகார்த்திகேயன் தற்பொழுது அறியப்படுகிறார். அதற்கு முன்னதாக உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே கேரள முதல்வர் திறனாய் வீட்டில் அதற்கு முன்னதாக உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே கேரள முதல்வர் பிரனாயி வீட்டில் உணவு அருந்தி இருந்த நிலையில் தற்பொழுது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1 ரூபா கூட வசூல் செய்யாது!! நடிகர் சிவாஜி படத்தை பழித்த ரஜினிகாந்த்!!

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்குமா அதிமுக? – ஒரு அலசல்!….