ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

0
168

ஹால் டிக்கெட் ஐடி தொலைந்தால் மாணவிக்கு நேர்ந்த சம்பவம் ?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டி களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த வருடம் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதாலும் , சிறு வயதிலேயே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாலும் மாணவி ஹரிஷ்மா நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகளுக்கான ஐடி வந்திருந்தது. இதன் மூலம் ஹால் டிக்கெட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஹரிஷ்மாவுக்கு ஒதுக்கப்பட்ட ஹால் டிக்கெட் ஐடியை மறந்துவிட்டதாக தெரிய வருகிறது .நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வை எழுத முடியாமல் போய் விடுமோ? என்ற பயத்தில் புலம்பி தப்பித்துள்ளார் .மேலும் வீட்டில் இருந்தவர்கள் ஹரிஷ்மாவை ஹால்டிக்கெட் தொலைத்தற்காக திட்டியுள்ளனர் .இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஹரிஷ்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.அக்கம்பக்கத்தினர் இதனை கண்டு அலறி அடித்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார்.இதனிடையே ஹரிஷ்மாவின் தந்தை கணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

Previous articleமற்றொரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் வகுப்பு! தேனியில் பரபரப்பு!
Next articleமேலும் ஒரு முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!!