இறந்த ஒருவரின் நகை மற்றும் பொருட்களை பயன்படுத்தினால் என்னாகும்? முழு விவரம் உள்ளே!

Photo of author

By Divya

இறந்த ஒருவரின் நகை மற்றும் பொருட்களை பயன்படுத்தினால் என்னாகும்? முழு விவரம் உள்ளே!

இறந்த நபர்களின் பொருட்களை வீட்டில் வைக்கலாமா? அதை பயன்படுத்தலாமா? என்ற பல கேள்விகள் உங்களுக்குள் இருக்கும்.தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் இறந்தால் அவர்களின் நினைவாக பயன்படுத்திய துணி,நகைகள்,போட்டோ,ஜாதகம் உள்ளிட்ட பல பொருட்களை சில வீடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.இவ்வாறு செய்வது நல்லதா என்று கேட்டால் அது நிச்சயம் சிலருக்கு நல்லதன்று என்பது தான் பதிலாக இருக்கிறது.

வாழ்ந்து அனுபவித்த முதிய உறவுகள் இயற்கையாக மரணமடைந்தால் அவர்கள் பயன்படுத்திய நகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.அவர்களின் துணிகளை நன்கு சுத்தம் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.அவர்களின் ஜாதகத்தையும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் விபத்தில் இறந்தவர்கள்,நிறைவேறாத ஆசையால் இறந்தவர்கள்,துடிக்க துடிக்க இறந்தவர்களின் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தான செயலாகும்.இவ்வாறு இறந்தவர்களின் நகைகளை கடைகளில் கொடுத்து புதிய நகைகள் வாங்கி அணியலாம்.

அதேபோல் இறந்தவர்களின் இரத்த கறை நிறைந்த உடைகள் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது.இயற்கை அல்லாத மரணம் நிகழ்ந்த ஒருவரின் ஜாதகத்தை ஓடும் நீரோடையில் விட்டுவிடுவது உங்களுக்கும் நல்லது.இறந்தவரின் ஆன்மாவிற்கும் நல்லது.இறந்தவர்களின் ஆடைகளை தாங்கள் பயன்படுத்தி வந்தால் அவை பல தீமைகளுக்கு வழிவகுக்கும்.