ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைத்தால் என்ன நடக்கும்? தெரிஞ்ச மிஸ் பண்ண மாட்டீங்க!!

Photo of author

By Divya

ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைத்தால் என்ன நடக்கும்? தெரிஞ்ச மிஸ் பண்ண மாட்டீங்க!!

தமிழ் மாதங்களில் மங்களமான மாதமாக ஆடி திகழ்கிறது.ஆடி ஒன்று,ஆடி பதினெட்டு மற்றும் ஆடி இருப்பது எட்டு ஆடி மாத பண்டிகைகளை கொண்டாடி வருகின்றோம்.அதேபோல் ஆடி கிருத்திகை,ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய நாட்களாக இருக்கின்றது.

இதில் ஆடி அமாவாசை நாள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த உரிய நாளாக உள்ளது. இந்நாளில் காக்கைகளுக்கு உணவளித்தால் முன்னோர்களின் ஆசி நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.

தமிழ் மாதங்களில் வரக் கூடிய அமாவாசை நாட்களில் விரதம் மேற்கொண்டு தங்களது முன்னோர்களை வழிபட தவறியர்கள் ஆடி மாத அமாவாசையில் இதனை கட்டாயம் செய்திட வேண்டும்.இந்த நாளில் முன்னோர்களுக்கு தகர்ப்பணம்,திதி கொடுத்தால் அவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் காக்கை வடிவில் பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது காலம் காலமாக நம்பப்படும் ஒரு நிகழ்வாகும்.இதனால் தான் ஆடி அமாவாசை மட்டும் அல்ல மற்ற மாதங்களில் வரக் கூடிய அமாவாசை நாளிலும் காக்கைக்கு படையல் வைத்து வழிபடும் வழக்கம் தமிழகர்களிடையே உள்ளது.இன்றைய அமாவாசை தட்சிணாய புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும்.

சனி பகவானின் வாகனமான காகத்திற்கு ஆடி அமாவாசை நாளான இன்று வாழை இலையில் உணவு படைத்து வழிபட்டால் நம் முன்னோர்கள் மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள்.அது மட்டுமின்றி காக்கைக்கு உணவளிப்பதால் நமக்கு புண்ணியம் வந்து சேரும்.ஆடி மாத அம்மாவாசை இன்று மாலை 5:30 மணி வரை இருப்பதினால் நாள் முழுவதும் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.