எனக்கு 16 வயதானால் என்ன? அவர் தான் எனக்கு வேண்டும்! கரூரில் நடந்த பரபரப்பு!

Photo of author

By Parthipan K

எனக்கு 16 வயதானால் என்ன? அவர் தான் எனக்கு வேண்டும்! கரூரில் நடந்த பரபரப்பு!

சேலம் தர்மபுரி ராமநாதபுரம் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணம் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் 25  இடங்களில் இந்த திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் 118 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது.

இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குமரமங்கலம் ஊரைச் சேர்ந்த 22 வயது வாலிபர் சரக்கு வாகன ஓட்டுநர் வேலை பார்ப்பவர். அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 16 வயது மகளை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கரூர் சைலன் லைன் அமைப்பு இருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து போலீசார் குளித்தலை ஊர் நல அலுவலர் சரோஜா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் திருமணம் செய்த வாலிபர் வாலிபரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய ஐந்து நபர்கள் மீதும் குளிதலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.