18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

Photo of author

By Parthipan K

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

Parthipan K

What is going to happen to the lives of 18 lakh students? Fear of parents!

18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆக போகின்றது? பெற்றோர்களின் பயம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களும்  மூடப்பட்ட நிலையில் பள்ளி மற்றும்  கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. அதனால் 2020-2021 ஆம் கல்வியாண்டில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு வைக்க படாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அதிமுக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி அந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தற்போது மாணவர்கள் அனைவரும் எந்த ஒரு போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொள்ளமுடியாமல்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழல் ஏற்படாமல் இருப்பதற்கு முன்னதாகவே பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய அரையாண்டு மற்றும் காலாண்டு போன்ற தேர்வு எழுதி இருந்ததை அடிப்படையாக வைத்து சராசரி மதிப்பெண் வழங்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பில் சுமார் 9 லட்சம் மாணவர்களும் 11ஆம் வகுப்பில் 9 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதாத நிலையில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர். இந்த 18 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாக உள்ளது என பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.