ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

Photo of author

By Savitha

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

Savitha

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட அவலம்!!

ஏப்ரல் 25ஆம் தேதி சீக் ரெஜிமென்ட் வீரர்களின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு காட்டுக்குள் பதுங்கிய PAFF பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் கண்டி காட்டு பகுதியில் பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கபடுகின்றனர், அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு சண்டை துவங்கியது.

இதன்இடையே பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி ஒன்றை வெடிக்க செய்கின்றனர். அதில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் 4 வீரர்கள் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. உடனடியாக 6 பேரும் உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், இறந்த 5 பேரும் 9ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் ஆவர்.

பின்னர் நேற்று இரவு 1.15 மணியளவில் பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றதை அடுத்து மீண்டும் துப்பாக்கி சண்டை துவங்கியது. இன்று காலை 5 மணியளவில் சிறிய மாற்றத்துடன் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

காலை 7 மணியளவில் பயங்கரவாதிகளை படையினர் சுற்றி வளைத்து நெருங்கினர், பயங்கரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் முடக்கிய போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒருவன் கொல்லப்பட்டான் மேலும் ஒரு பயங்கரவாதி காயமடைந்து உள்ளதாக தெரிகிறது.

ஒரு AK-47 துப்பாக்கி, நான்கு AK-47 மேகஸின்கள், AK-47 துப்பாக்கிக்கான 56 தோட்டாக்கள், ஒரு 9mm கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான ஒரு மேகஸின், 3 கையெறி குண்டுகள் மற்றும் ஒரு ஆயுத பை ஆகியவை கைப்பற்றபட்டுள்ளன.

கொல்லப்பட்ட பயங்கரவாதயின் அடையாளத்தை அறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.