என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்? டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட இருவர் காரணம் என்ன?

0
145

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த 9ம் தேதி ஆரம்பமானது. ஐந்து வருடங்களாக மிகவும் பிரபலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஜிபி முத்து, அசல் கோலாரு, சிவின் கணேசன், முகமது அசிம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, செரினா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆரியன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி, சாணக்கியன், விஜே கதிரவன், குயின்சி ஸ்டான்லி நிவா, தனலட்சுமி என்று 20 பேர் பங்கேற்றார்கள்.

மைனா நந்தினி வெயில் காடு என்று ஆக 21 ஆவது நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் கடந்த வாரம் இருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். முதலாவதாக ஜிபி முத்து நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக எலிமினேஷன் லிஸ்டில் இருந்த டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைவான வாக்குகளை பெற்றதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், மீதமுள்ள 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று கொண்டு வருகிறார்கள். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக குயின்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அசிம், மகேஸ்வரி, ஆயிஷா, அசல், ரட்சிதா, ஜனனி, மற்றும் ஆரியன் தினேஷ் கனக ரத்தினம் உள்ளிட்டோர் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டாஸ்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற கேம் வழங்கப்பட்டது. அந்த டாஸ்க் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களின் பெயர்களும் ஒட்டப்பட்ட பொம்மைகள் கார்டன் பகுதியில் அமைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தன்னுடைய பெயர் இல்லாமல் மற்றவரின் பெயர் உள்ள பொம்மையை எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த போட்டியால் பிக் பாஸ் வீட்டுக்குள் பல கலவரங்கள் உண்டானது.

இந்த நிலையில் இன்று 19ஆவது நாளுக்கான முதல் ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது அதில் டால் ஹவுஸில் ஒரு இடம் காலியாக இருக்கின்ற நிலைகள் அசல் அசிம் பெயர் கொண்ட பொம்மையையும், அசிம் விக்ரம் பெயர் கொண்ட பொம்மையையும் எடுத்துச் சென்று டால் ஹவுஸில் வைக்காத காரணத்தால் அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்ட இருவரும் இந்த சுற்றில் இருந்து வெளியேற்றப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

Previous articleஇந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!
Next articleபெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!