இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!

0
103
Do not impose Hindi! The party leaders who went to protest again!

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது.

மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் உள்ள ஆங்கில மொழியை மாற்றி இந்தியில் மட்டுமே தேர்வு நடக்கும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இதனை எதிர்த்து தி.மு.க இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று இந்தி திணிப்பை கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.மேலும் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தலைமை வகித்தார்.மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ,மாநில செயற்குழு உறுப்பினர்,வாலிபர் சங்க பொருளாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

author avatar
Parthipan K