என்னுடைய இறப்பிற்குப் பிறகுதான் நாம் தமிழர் கட்சியை அழிக்க முடியும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் பலரும் அதில் இணைந்து பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். அந்தவகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை மீது மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து வருகிறார்.
இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
அதில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதற்கு பதிலளித்த சீமான், “கட்சியில் நான் மட்டும்தான், நான் இல்லைன்னா கட்சியே இல்லைன்னு யாராவது நினைக்கிறார்களோ.. நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும். இதற்குள் நயவஞ்சகம், சூழ்ச்சி இருக்கிறது.
இப்படியான ஒரு நயவஞ்சகம் மூலம் ஒரு சூழ்ச்சி துரோகத்தை உலகத்திலேயே நான் எங்குமே பார்த்தது இல்லை. இதுவரை எவ்வளவு பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன், சிறைபடுத்தப்பட்டிருக்கிறேன், அப்போது கூட எனக்கு வேதனை இல்ல.
ஆனால் தற்போது என்னை தூற்றுபவர்கள் என் சாவுக்காக காத்திருக்கிறார்கள்.
சொந்த பிள்ளை மாதிரி வளர்த்தேன். ஆனால் அவர்கள் என் சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கட்சியில் ஆயிரம் பேர் வருவார்கள் போவார்கள். அதற்காக கட்சியில் இருந்து இரண்டாக உடைக்க நினைப்பவர்களுக்கு நான் சாகும் வரை அது நட்க்காது” என தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சியில் மாநில தலைமை நிர்வாகியான கல்யாணசுந்தரம் என்பவர் தற்போது கட்சியில் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் கட்சிக்குள் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சீமான் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் கட்சிக்குள் நிதி வாங்குதல் தொடர்பான கருத்து மோதல்களால் கல்யாணசுந்தரம் கட்சியிலிருந்து வெளியேறுவார் அல்லது நீக்கப்படுவார் எனவும் நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கல்யாண சுந்தரத்தை தொடர்ந்து இவருடையஆதரவாளர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் வெளியேறுவார்கள் எனவும் தெரிவிக்கின்றனர்.