சமீபத்தில் NDA-கூட்டணியில் இருந்து விலகிய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவர் விலகியதற்கு காரணம், நயினார் நாகேந்திரன் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து, டி.டி.வி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ஜ.க-விற்கு பேரிடியாக இருந்தது. இதற்க்கிடையில் டி.டி.வி தினகரன் எடப்பாடி பழனிசாமியை NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்ற வாதத்தையும் முன் வைத்துள்ளார்.
அவரை தவிர யார் வேட்பாளராக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஈ.பி.ஸ், ஓ.பி.ஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் ஆதரவு NDA-வுக்கு தேவைப்படுவதால் அவர்களை ஒருங்கிணைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து வெளியேற்றியதற்காக அவரை பழிவாங்கும் நோக்குடன் டி.டி.வி தினகரன் செயல்பட்டுவருவதாகவும், டி.டி.வி தினகரனுக்கு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அவர் எடப்பாடி பழனிசாமி மீது தான் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், உண்மையிலேயே அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென்று அவர் நினைத்தால், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருப்பார். அவ்வாறு அ.தி.மு.க ஒன்றிணைந்தால் டி.டி.வி தினகரன் அவருடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து, அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.
மற்றொரு புறம் டி.டி.வி தினகரனுக்கு NDA-வின் முதல்வர் வேட்பாளராக விருப்பம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவரின் நோக்கம் ஒன்றிணைவது அல்ல. எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதே ஆகும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.