என்ன இந்தியாவிற்கு 22 ஆவது இடமா! சைக்கிளை இனி பயன் படுத்துங்கள் கிரீன் கியூஸ் நிறுவனம் வலியுறுத்தல்! 

Photo of author

By Rupa

என்ன இந்தியாவிற்கு 22 ஆவது இடமா! சைக்கிளை இனி பயன் படுத்துங்கள் கிரீன் கியூஸ் நிறுவனம் வலியுறுத்தல்!

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற நிறுவனம் உலகளவில் எந்த நாட்டின் நகரங்கள் அதிக அளவில் மாசடைந்துள்ளன என கணக்கெடுத்துள்ளது.அதில் உலகில் மிக மோசமாக மாசடைந்த நாட்டின் நகரங்கலின் பட்டியலில் அனைத்து கணக்கெடுப்பின் போதும் இந்தியா தனது இடத்தை தக்க வைத்துக்கொள்கிறது.இதில் உலகில் அதிக மாசடைந்த நகரங்களில் இந்தியாவில் 22 நகரங்கள் அதிக மாசடைந்து இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனாவின் 9 இடங்களும் அதனையடுத்து இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்,குலஞ்சர்,பெஸ்ரப்,ஜலால்பூர்,நொய்டா,கிரேட்டர்,கான்பூர்,லக் னோ,ஆகிய நகரங்களும் மற்றும் இதனுடன் ராஜஸ்தான் மாநிலத்தில் திவாரி இடம் பிடித்துள்ளனர்.இதனோடு தலைநகர் டெல்லியும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியானது மிகவும் மோசமடைந்து உலக நாடுகளிலே முதல் நாட்டின்  தலைநகராக இடம் பெற்றுள்ளது.இந்தியாவில் மட்டும்மல்லாமல் அனைத்து நாடுகளிலும் காற்று மாசடைய முக்கிய காரணம் போக்குவரத்து,விறகு எரிப்பது,மின்சார உற்பத்தி,தொழில்துரை கட்டுமான பணிகள் என அனைத்தும் காரணமாக உள்ளன.

இதனை அனைத்தையும் புரிந்து மக்கள் ஒன்றுபட்டு இந்த பயன்பாட்டினை குறைத்துக்கொள்ள வேண்டும்.இதில் அனைத்திலும் முதலிடம் பிடிப்பது போக்குவரத்து தான்.ஆகையால் மக்கள் காற்றின் தரத்தை மேம்படுத்த பொது மக்கள் அனைவரும் சைக்கில் ஓட்டுவதை பின்பட்ற தொடங்கலாம்.இதனை ஊக்க படுத்த வேண்டும் என கீரின் கியூஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.