என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

0
77

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் என்னும் நகரில் முதன்முதலாக காணப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் அனைத்தும் தவித்து கொண்டிருந்தன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில், தடுப்பூசிகளை உலக நாடுகள் கண்டுபிடித்தன. அதன்பிறகு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதனை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்திலேயே உலக நாடுகள் பலவற்றிலும் வேகமாக பரவியது.

இந்த ஒமைக்ரானின் தாக்கத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரிதும் பாதிக்கப்படன. இந்த ஒமைக்ரானின்  வருகைக்கு பிறகு, கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றானது வேகமாக பரவத் தொடங்கியது. எனவே, இந்த தொற்றை கட்டுபடுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் கூறுகையில்:-

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸை எதிர்த்து போராட அமெரிக்காவில், 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என கூறியுள்ளார். மேலும், பூஸ்டர் தவணை தடுப்பூசி வயது மற்றும் பாதிப்பின் அடிப்படையில் போடப்படலாம் என்றும், இந்த 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவது வெளிப்படையாகவே பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார்.