பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடை?

Photo of author

By Parthipan K

பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்படுவதாக உள்ளது.மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் பக்ரீத் பண்டிகை விழா குறித்து  மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு தாக்கலில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாடு,ஒட்டகம் போன்றவற்றை பொதுவெளிகளில் வெட்ட அனுமதிக்கக்கூடாது எனவும் விழா நாட்களின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அந்த நிலையில் அரசு விதிகளை பின்பற்ற  தவறுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் கடந்த ஜூன் 20ஆம் தேதி பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவதற்கான தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் இம்மனு  குறித்து விசாரிக்க ஆஜரான வழக்கறிஞர் , அரசின் கருத்துக்களை அறிந்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையிலும், தமிழகத்தின் ஆகஸ்ட் 31ம் தேதி ஊரடங்கு அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதிக்க மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என  தமிழக அரசும், காவல்துறையினரும் உத்தரவிட்டனர்.