Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? 

Photo of author

By Parthipan K

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? 

Parthipan K

Updated on:

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன?

நீங்கள் பசியால் வாடுவது போல் கனவு கண்டால், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்யப்போகும் சிறு முயற்சிகள் கூட பெரிய லாபத்தைத் தேடிக் கொடுக்கப் போகின்றது என்று பொருள்.

நீங்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்ப்பது போல கனவு கண்டால், நீங்கள் உங்களுடைய வருமானத்தைவிட அதிகமாய் செலவழிக்கிறீர்கள் என்று பொருள். அதை கட்டுப்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் கல்வி கற்பது போல் கனவு வந்தால், உங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் பல அம்சங்களை திருத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நிதானமாக செயல்பட்டு அவற்றை எல்லாம் சரி செய்து கொள்ளவும்.

நீதிமன்றத்தை கனவில் கண்டால், நீதிக்காக போராடி இருந்தால், அதற்கு கைமேல் பலன் கிடைக்கும் என அர்த்தம். அது உங்களுக்கு சாதகமாகவும் மன திருப்தியாகவும் அமையும். கோர்ட் வழக்கு இல்லாதவர்களுக்கு ஏதாவது வழியில் கோர்ட் படி ஏறும் நிலை வரும். ஆகவே எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்வது நல்லது.

நீங்களே இசை நிகழ்ச்சியில் பாடுவது போல் கனவு வந்தால் பெரும் புகழை அடைய போகிறீர்கள் என்று பொருள்

நீங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் போது உங்களுக்கு கயிற்றை கொடுத்து யாரோ உதவுவது போல கனவு கண்டால், பெரிய லாபகரமான விஷயங்கள் எதிர் பார்க்காமல் நடக்கும். தடைபட்ட சுப நிகழ்ச்சிகளின் தடை விலகும்.

நீங்கள் ஒரு குகையின் முன்னால் நிற்பது போல் கனவு கண்டால், நீங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று பலரால் வற்புறுத்தப்படுவீர்கள் என்று பொருள். ஆகவே திருமணம் செய்து கொள்ளுங்கள்.