மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

0
105

மாணவர்களை மீட்பதில் மத்திய அரசின் திட்டம் என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷியா இன்று பத்தாவது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய நாட்டு மக்களையும் அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது, கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷியாவின் இந்த தாக்குதலால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த போரின் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனிடையே தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக  அடுத்த 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாட்டிற்கு செல்லவுள்ளன. உக்ரைனில் உள்ள கடைசி இந்தியரை மீட்கும் வரை ஆபரேஷன் கங்கா திட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

author avatar
Parthipan K