பூர்வீக சொத்துகள் என்பவை குடும்பத்தின் மைல்கல் ஆனால், இவை யாருக்கு உரிமை? தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? ஒருவேளை திடீரென ஒருவர் மரணமடைந்தால், அவரது சொத்துகளை மீட்பது எப்படி? இவை எல்லாவற்றையும் விளக்கும் ஒரு சரியான வழிகாட்டியை இங்கே பார்க்கலாம்.
பூர்வீக சொத்துகள் என்பது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் சொத்துகள். இவற்றை பாகப்பிரிவினை மூலம் உரிமை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துகளில் எந்த வாரிசுக்கும் அதிகாரம் கிடையாது. அந்த சொத்துகளை விற்கவும், தானமாக தரவும், உயிலாக எழுதவும் சொந்தக்காரர் முடிவு செய்யலாம்.
2005ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமை சட்ட திருத்தம் மகள்களுக்கு பெரிய வெற்றி கொண்டுவந்தது.
தந்தையின் சொத்தில் மகளுக்கும் மகனுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
திருமணமானாலும், இல்லாவிட்டாலும் மகளின் உரிமை பாதிக்கப்படாது.
திருமணமான பெண்ணுக்கும், விவாகரத்து பெற்றவருக்கும் தந்தையின் சொத்தில் பூரண உரிமை இருக்கும்.
தந்தை உயிலாக சொத்துகளை பிறருக்கு அளித்திருந்தால், வாரிசுகள் அவற்றில் உரிமை கோர முடியாது. ஆனால் உயில் இல்லாத நிலையில், வாரிசுகள் சட்டத்திற்கேற்ப உரிமை கோரலாம்.
ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவருடைய சொத்துகளை மீட்பது மிகவும் அவசியம். அதற்கு கீழ்க்கண்ட செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்:
1. இறப்பு சான்றிதழ்: அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கும் இந்த ஆவணம் அத்தியாவசியம்.
2. வங்கி மற்றும் முதலீட்டு விவரங்கள்:
தனி மற்றும் கூட்டுக் கணக்குகள்.
மியூச்சுவல் பண்ட், PF, இன்சூரன்ஸ் முதலிய தகவல்கள்.
3. கடன் தகவல்:
இறந்தவரின் கடன்களை திருப்பி செலுத்துவது அவசியம்.
வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?
உயில் இல்லாதபட்சத்தில், சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டியிருக்கும். இதற்காக கோர்ட்டை அணுகி சான்றிதழ் பெறலாம்.
பின்னர், சொத்து மற்றும் முதலீட்டு பட்டியல்களை உருவாக்கி உரிமை கோரலாம்.