இயக்குனர் “சுகுமார்” இயக்கத்தில் கடந்த “2021 ஆம்” ஆண்டு வெளியான படம் தான் “புஷ்பா தி ரைஸ்” இந்தப் படம், தெலுங்கு மட்டும் அல்லாமல் “இந்திய அளவில்” நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் “அல்லு அர்ஜுன்,பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா” உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து “புஷ்பா 2” வெளியாகும் என்ற செய்தியும் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வந்தது. தற்போது “புஷ்பா தி ரூல்” என்ற இதன் “இரண்டாம் பாகம்” “டிசம்பர் 5ஆம் தேதி” உலக அளவில் வெளியாக உள்ளது.
இந்த படத்துக்கு “தேவி ஸ்ரீ பிரசாத்” இசையமைத்துள்ளார். இந்த படத்தின் “புரமோஷன்” வேலைகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் புரமோஷனுக்காக “கொச்சிக்கு” வந்த “அல்லு அர்ஜுன்” அவர்கள், புஷ்பா படத்தின் வில்லனாக “பகத் பாசில்” நடிக்க ஒப்பு கொண்டதையும், அதற்கு என்ன காரணம் என்பதையும் பகிர்ந்துகொண்டார்.
இது பற்றி “அல்லு அர்ஜுன்” கூறுகையில், இயக்குனர் “சுகுமார்” அவர்கள் மீது பகத் வைத்திருக்கும் அன்பினாலும், புஷ்பா படத்தின் மீது கொண்ட “காதலாலும்” தான், இந்த படத்தில் “பகத் வில்லனாக” நடிக்க ஒத்துக் கொண்டார். அவருடைய அற்புதமான நடிப்பை “புஷ்பா 2 படத்தில்” காணலாம், அதற்காக அவருக்கு, “நன்றி என் சகோதரா”, “நன்றி என் அன்பான பகத் பாசில்” என்று அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.