மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை வெளிவிட காரணம் என்ன? எதற்காக?

Photo of author

By Parthipan K

அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருக்கும் கொசுக்களால் அதிகமான நோய் தொற்று ஏற்படும் இந்த நிலையில், புதிதாக கொசுக்கள் பறக்க விடலாமா? என்று பலரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.இதற்கு விளக்கம் அளித்த நிறுவனம் மனிதர்களுக்கு ஏதுவாகவே  செய்யப்பட்டு கொசுக்கள் பறக்க விடுவதாக கூறியுள்ளனர்.சாதாரணமான கொசுக்களை இல்லாமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களால் டெங்கு, ஜிகா வைரஸ் நோய்கள் மனிதர்களுக்கு பரப்பும் கொசுக்கள் எண்ணிக்கையை குறைக்க இயலும் என்பதால் பறக்க விடுவதாக கூறினார்.

இதனால்  பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகம் ,இத்திட்டம் ஒப்புதல் பெறாது இருந்தது. தற்போது அந்நாட்டு அரசு  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம்  பொதுமக்களிடையே நடத்தப்படும். “ஜுராசிக் பார்க் பரிசோதனை” என்று பெயரிடப்பட்ட மரபணு மாற்று கொசுக்கள் இயற்கை மண்டல சோதனையை ஏற்படுத்தப்படும் என்றும் செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தை முன்வைத்து வரும் நிறுவனம் ,அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டி இதனால் மனிதர்களுக்கு சுற்றுச்சூழல் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அன்நிருவனம் தெரிவித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை அமெரிக்க அரசு பறக்கவிட ஒப்புதல் அளிக்கப்பட்ட சில மாதங்களே ஆன நிலையில், 2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சில பகுதிகளில் சுமார் 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிட உள்ளூர் அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட அமெரிக்காவில் செயல்படும் ஆக்ஸ்போர்ட் என்னும் நிறுவனத்திற்கு OX5034 என்று அழைக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் ஏடிஎஸ் கொசுக்களை உற்பத்தி செய்வதற்கு அரசு சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளித்துள்ளது.அதாவது ஏடிஸ் கொசு தான் மனிதர்களிடம் டெங்கு, ஜிகா சிக்கன்குனியா மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட காமன் நோய்களை பரவ அறியப்படுகிறது.

முட்டைகளை உற்பத்தி செய்ய ரத்தம் தேவை என்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடிக்கின்றன.இதுபோன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் வெளியே விடுவதால் பெண் கொசுக்கள் உடன் இனப்பெருக்கம் செய்யும் பொழுது மனிதர்களிடம் பரப்பும் நோக்குடன் குறையும். அதற்குத் தேவையான பூக்களில் உள்ள தேனை மட்டுமே அருந்தும் ஆண் கொசுக்கள் தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களை பரப்பிக் கொண்டே இருக்கும்.

காலப்போக்கில்  கொசுக்களின் எண்ணிக்கை குறைந்து மனிதர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக இத்திட்டத்தின் நோக்கமாக இருப்பதாக கூறியுள்ள

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கலிபோனியா கிளிப்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்க விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு எதிராக change.org உருவாக்கப்பட்டு மக்களிடம் கோரிக்கை மனுவை முன்வைத்து இரண்டரை லட்சம் பேர் அமெரிக்க சோதனைக்காக பயன்படுவதற்கு குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம் பிரேசிலில் தங்கள் சோதனை முயற்சிகளை முயற்சித்து பார்த்து மனிதர்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இத்திட்டத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு செயல்படுவதற்கு அமெரிக்க நிறுவனம் அனுமதி ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், ஆனால் மாகாணம் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகிகள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியுள்ளது.