உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலை என்ன மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி!

0
102

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் அந்த நாடுகளில் இருக்கும் மற்ற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பிவிடும் படி கோரிக்கை வைத்தது.

அதனடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களுடைய நாட்டு மக்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பவேண்டும் தற்போது சூழ்நிலை சரியில்லை எப்பொழுது வேண்டுமானாலும் போர் மூளலாம் என்று எச்சரிக்கை செய்தது.

ஆனால் உக்ரேனில் பல இந்திய இளைஞர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு சரிவர இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

எந்த நிமிடம் வேண்டுமானாலும் போர் மூலம் என்ற சூழ்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை தருகிறது.

அத்துடன் உக்ரைனில் படித்துக் கொண்டிருக்கும் பல மாணவிகள் வீடியோ மூலமாக இந்திய அரசாங்கத்திற்கு தங்களை இந்தியாவிற்கு அழைத்து செல்ல உதவுமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து கொண்டிருப்பதால் இந்திய மக்கள் மற்றும் உக்ரைனில் படிக்கும் மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் பல சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

உக்ரைனின் வான் வழித்தடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில் அண்டை நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் வெளியுறவுத் துறை ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும் நிலைமை தீவிரம் அடைந்ததற்கு மத்திய அரசு சுதாரித்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக நிலைமை மோசமாக அதற்கு முன்னதாகவே அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து இருக்கலாம் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

Previous articleவீறு கொண்டு எழுந்த ரஷ்ய படையை நாசம் செய்த உக்ரைன்!
Next articleஉக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் நாடு திரும்பும் செலவை தமிழக அரசே ஏற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!