அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பல தலைமை இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அதாவது பொதுச் செயலாளர் என்ற பதவியை மறுபடியும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும், ஆனால் பொதுச்செயலாளர் யார் என்ற கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் இரண்டு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த இருவருக்கும் இருக்கும் பனிப்போரை பயன்படுத்திதான் ஒருசிலர் சசிகலாவை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள். அவர் அதற்கு இரையாகி விடக் கூடாது என்று சொல்கிறார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி.
பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே இருக்கும் பனிப்போர் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த கட்சியின் வீண் ஆவதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. நோய் தொற்று பரவல் முடிவுக்கு வரட்டும் நான் நிச்சயம் வருகிறேன் என்று சசிகலா பேசியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் அதில் ஒலித்தது சசிகலாவின் குரல் தான் இருந்தாலும் சசிகலா பேசியது அதிமுகவினர் இடம் கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருப்பவரிடம் தான் என்று தெரிவிக்கிறார் கேபி முனுசாமி. அதன் பிறகு அவரே அவர் தனக்கு சாதகமாக உள்ள சிலரை வைத்துக்கொண்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் அவருடைய எண்ணம் எப்போதும் ஈடேராது என்று தெரிவித்திருக்கிறார்
சசிகலா உடைய இந்த ஆடியோ விவரம் குறித்து அதிமுகவினர் இடையே மிகப் பெரிய சலசலப்பு உண்டாகி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் இது தொடர்பாக ஆலோசனை செய்து விட்டு அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக தான் கேபி முனுசாமி அப்படி உரையாற்றியதாக தகவல் கிடைத்திருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு முன்பு இருந்தே அதிமுகவில் சசிகலாவின் தொடர்பை எதிர்த்து வருகின்றார். அதன் காரணமாகத்தான் சசிகலாவை எதிர்த்து பன்னீர்செல்வம் தர்மயுத்தம் ஆரம்பித்தபோது அவர் பின்னால் நின்றார் கேபி முனுசாமி. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அணிகளின் இந்த பின்னரும்கூட சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருந்தார்.
ஆனாலும் அன்று சசிகலாவை எதிர்த்த பன்னீர்செல்வம் இன்று அவரை சந்திக்கவும், அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக தகவல் கிடைக்கின்றன. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை சசிகலாவின் ஆடியோ விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு அவர் பன்னீர்செல்வத்தின் ஆலோசனையை கேட்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
இதற்கு முன்னர் சசிகலாவின் ஆதரவு நிலையில் இருந்தாலும்கூட தற்சமயம் தீவிர சசிகலாவின் எதிர்ப்பில் இருப்பதால்தான் எடப்பாடி பக்கம் முனுசாமி சாய்ந்து இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக தான் அவரிடம் மட்டும் ஆலோசனை செய்து விட்டு கேபி முனுசாமி பேட்டி கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலா அதிமுகவிற்க்குள் நுழைந்துவிட இயலாது.ஜெயலலிதா ஆன்மா சாந்தியடைய வேண்டுமானால் சசிகலாவின் குடும்பம் அதிமுகவை விட்டு தள்ளியே இருக்க வேண்டும் என்பது முனுசாமியின் முடிவா? அதிமுகவின் முடிவா என்று தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது