நடிகர்களுக்கே எதுவும் செய்திடாத விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார்!! காமெடி நடிகர் கிளி ராமச்சந்திரன்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் பேசியதை குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் பெரிய நடிகர்கள் யாரும் தன்னுடன் நடிக்கும் உங்களுக்கு உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் கிளி ராமச்சந்திரன் அவர்கள்.

மறைந்த நடிகர் விவேக்குடன் பல படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் கிளி ராமச்சந்திரன் ‘விஜய் சார் அரசியலில் நீடிக்க முடியாது. ஏனெனில் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார். அதேநேரம், தன்னுடன் நடித்த நடிகர்களுக்கு செய்ய எந்த நடிகரும் முன்வருவதில்லை. முதலில் உங்களுடன் நடிக்கும் நடிகர்களுக்கு உதவுங்கள்.. அதன்பின் மக்களுக்கு உதவுங்கள்’ என்று தனது ஆதங்கங்களை கொட்டியுள்ளார் என்றும் கூறலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வை நாங்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறோம் என கூறிய இக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை, தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு முதலில் உதவுங்கள் என காமெடி நடிகர் கூறியது பலரையும் தன் பக்கம் கவனம் இருக்க வைப்பதாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியினர் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் விஜய். அதைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதியான நேற்று விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.

இதில் பல லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கலந்து கொண்டனர். இந்த மாநாடு பெரும் வரவேற்பை பெற்ற போதிலும் பலரிடையில் விமர்சனங்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.