நமது வீட்டு பிரிட்ஜில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது!!உணவு பாதுகாப்புத் துறையினரின் விளக்கம்!!

Photo of author

By Janani

நமது வீட்டு பிரிட்ஜில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது!!உணவு பாதுகாப்புத் துறையினரின் விளக்கம்!!

Janani

What items should not be kept in our home bridge!!Explanation of food safety department!!

நமது வீட்டிலும் சரி ஹோட்டல்களிலும் சரி ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் தான் வைத்துக் கொள்வோம். ஃபிரிட்ஜ் ஆனது என்னதான் நமது உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக வைத்துக் கொண்டாலும் அதனால் பல தீமைகள் ஏற்படவும் செய்யும். அதே சமயம் ஒரு சில காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை பிரிட்ஜ்ஜின் உள் வைக்க கூடாது என்ற விதிமுறைகளும் உள்ளது. அதனை இன்று பலரும் அறியாமல் இருக்கிறோம். அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதற்காகத்தான் உணவு பாதுகாப்புத் துறையினர் எந்தெந்த பொருட்களை பிரிட்ஜ்ஜின் உள் வைக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
பிரிட்ஜினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதே சமயம் ஃப்ரீசரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முறையே பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. ஃப்ரீசரின் டெம்பரேச்சர் மற்றும் ஃப்ரிட்ஜின் டெம்பரேச்சர் ஐ மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் இரவிலேயே வெங்காயத்தினை உரித்து அதனை பிரிட்ஜின் உள்ளே வைத்து விடுவர். அவ்வாறு செய்வது மிகவும் தவறு. வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, சக்கரவள்ளி கிழங்கு போன்ற எந்த பொருளையும் ஃப்ரிட்ஜின் உள்ளே வைக்கக் கூடாது. பூக்கள் வாடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக வாசனை உள்ள பூக்களையும் நாம் பிரிட்ஜின் உள்ளே வைப்போம். ஆனால் அதனையும் உள்ளே வைக்கக் கூடாது என உணவு பாதுகாப்பு துறையினர் கூறுகின்றனர்.
அதேபோன்று அசைவ உணவினை நாம் சமைக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகும் என்கின்ற பொழுது மட்டும் பிரீசரின் உள்ளே வைக்கலாம். ஆனால் நாட்கள் கணக்கில் சிக்கன், மட்டன்,மீன் போன்ற எந்த பொருட்களையும் பிரீசரின் உள்ளே வைக்கக் கூடாது. ஏனென்றால் ஃப்ரீசரின் உள்ளே வைத்தாலும் கூட சில நாட்களில் அதன் மேல் பாக்டீரியாக்கள் வளர தொடங்கி விடும். அதுமட்டுமன்றி இந்த பாக்டீரியாக்கள் பிரிட்ஜின் உள் இருக்கக்கூடிய மற்ற பொருட்களிலும் பரவத் தொடங்கிவிடும். எனவே சிக்கன், மட்டன், மீன் போன்ற எந்த பொருட்களை வாங்கினாலும் அதனை மஞ்சள் கொண்டு கழுவி விட்டு பிறகு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே ஃப்ரீசரின் உள்ளே வைக்க வேண்டும்.
எந்த ஒரு பொருளும் சூடாக இருக்கும் பொழுது ஃப்ரிட்ஜின் உள்ளே வைக்கக் கூடாது. ஏனென்றால் அதன் உடனடி வெப்ப நிலை மாற்றத்தால் அந்த பொருள் விஷமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. இது மட்டுமன்றி வெப்பநிலை மாற்றத்தால் நமது வீட்டின் பிரிட்ஜ் ஆனது பாதிப்புக்கு உள்ளாகவும் கூடும். ஊறுகாய் மற்றும் தேன் ஆனது கெட்டுப் போகாத பொருட்கள் தான். ஆனால் மக்கள் அதனையும் பிரிட்ஜின் உள்ளே தான் வைக்கிறார்கள். ஆனால் அதனை பிரிட்ஜின் உள்ளே வைக்க கூடாது என உணவு பாதுகாப்புத் துறையினர் கூறுகின்றனர்.
கேக் மற்றும் பிரட்டினை பிரிட்ஜின் உள்ளே வைக்கும் பொழுது அதில் பாக்டீரியாக்கள் ஏதேனும் இருந்தால் அது வளர்ச்சி அடைந்து விடும். பின்னர் அந்த உணவினை நாம் உண்ணும் பொழுது நமது உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகவும் கூடும். அதேபோன்று நாம் குடிக்கக்கூடிய கூல்ட்ரிங்க்ஸ்சினை ஓப்பன் செய்து விட்டோம் என்றால் ஒரு நாள் பிரிட்ஜின் உள்ளே வைத்துக் கொள்ளலாம். மற்றபடி ஓப்பன் செய்யாவிட்டால் வெளியேயே வைத்துக் கொண்டு ஐஸ்கட்டிகளை போட்டு குளிர்ச்சியாக குடித்துக் கொள்ளலாம். பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
ட்ரை ஃப்ரூட்ஸ் ஏற்கனவே அதனை கெட்டுப் போகாதவாறு தான் தயாரித்து இருப்பார்கள் இருந்தாலும் அதனை பிரிட்ஜின் உள்ளே தான் வைக்கிறார்கள். அதேபோன்று ஜாம் அதனையும் பிரிட்ஜின் உள்ளே வைக்கக் கூடாது. கடைகளில் காய்கறிகளுக்கு என ஒரு தனி பிரிட்ஜும், அசைவ உணவுகளுக்கு என தனி பிரிட்ஜும் வைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் அசைவ உணவுகளில் விரைவில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும் எனவே காய்கறிகளும் ஒரே பிரிட்ஜில் இருந்தால் அந்த பாக்டீரியாக்கள் அந்த காய்கறிகளிலும் பரவிவிடும்.
அசைவ உணவுகளை வைக்கும் பொழுது நன்றாக பேக் செய்து மூடி வைக்க வேண்டும். அசைவ உணவுகளை ஒரு நாள் மட்டுமே ஃப்ரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். நாம் செய்யும் குழம்பு ஏதேனும் மிச்சமாகிவிட்டால் அதனை பிரிட்ஜின் உள்ளே வைத்து விடுகிறோம். மீண்டும் அதனை எடுத்து சூடு செய்கிறோம், மீண்டும் அதனை பிரிட்ஜின் உள்ளே வைக்கிறோம். இவ்வாறு செய்யக்கூடாது ஏனென்றால் அந்த உணவு அதன் தன்மையை இழந்து விஷமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை பிரிட்ஜின் உள்ளே வைத்து திரும்பத் திரும்ப சூடு செய்வதால் அந்த உணவை நம் உட்கொள்ளும் பொழுது நமக்கு அல்சர் மற்றும் கேன்சர் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அதே போன்று பிரீசரின் உள்ளே வைக்கக்கூடிய ஐஸ்கட்டிகளை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். ஐஸ்கிரீமையும் ஒரு நாளைக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் ஐஸ்கிரீமை பிரிட்ஜின் உள்ளேயே வைத்துவிட்டு பிறகு அதனை சாப்பிடும் பொழுது தான் குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படும்.