கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற அவரது மகள் செய்த காரியம்! திகைத்துப்போன பொதுமக்கள்!

Photo of author

By Rupa

கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற அவரது மகள் செய்த காரியம்! திகைத்துப்போன பொதுமக்கள்!

சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணி முன்பே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேறிவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

அதனால் இன்று விருவிருப்பாக கடைசி பரப்புரை நடைபெற்று வருகிறது.கருத்துகணிப்புகள் இனி வெளியிட கூடாது எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.இந்த கடைசி இரு நாளில் மட்டும் ரூ.412 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என தேர்தல் ஆணையர் சத்திய பிரதாசாகு கூறியுள்ளார்.அனைத்து கட்சிகளுன் இந்த ஆண்டுய் ஆட்சியை பிடிப்பதற்கு இவ்வாறு பல நூதன முறைகளை பின்பற்றி வருகிறது.

அதுமட்டுமின்றி ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்பதற்காக சிவகாசியை சேர்ந்த குருவைய்யா என்பவர் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தன் விரலை துண்டித்துக்கொண்டார்.இவ்வாறு  பலவிதங்களில் மக்களின் ஓட்டுகளை கவர நினைக்கும் வகையில்,கமல்ஹாசனின் இளைய மகள் தன் அப்பா வெற்றி பெற இன்று சுகாஷினி உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவரை வரவேற்பதற்காக டிரம்ஸ் வைக்கப்பட்டது.

அந்த டிரம்சை இசைக்கும் படி கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் மற்றும் சுகாஷினி இருவரும் வீதியில் இறங்கி குத்து நடனம் ஆடினர்.இதை பார்த்த அனைவரும் திகைத்து போய் நின்றனர்.இதுவரை திரையரங்குகள் மற்றும் தொலைக்கட்சிகளில் இவர்களது நடனங்களை பார்த்தவருக்கு நேரடியாக இவர்கள் நடனம் ஆடுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.