மோடி செய்வது துரோகத்தின் உச்ச கட்டம்! எதற்கு செய்ய வேண்டும்? எதிர்கட்சி தலைவர் ஒரே தாக்கு!
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு புதிய மின்சார சட்டத்தை கொண்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படும். மின் உற்பத்தி மற்றும் மின் வினியோகம் தனியார் வசம் சென்றுவிடும். கட்டணத்தை செலுத்தாவிட்டால் எக்காரணம் கொண்டும் மின் வினியோகம் செய்யப்படாது. மின் மானியம் ரத்து செய்யப்படும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
22.50 கோடி ப்ரீபெய்டு முறையில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் மீட்டர் பொருத்தப்படும். கணக்கில் கட்டணம் இல்லாவிட்டால் தானாகவே மின் வினியோகம் நின்றுவிடும். நாட்டில் உள்ள மொத்த மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.4½ லட்சம் கோடி கடன் உள்ளது. மின் உற்பத்தி செலவு அதிகமானதற்கு, மத்திய அரசு நிலக்கரி விலையை உயர்த்தியதே காரணம் ஆகும்.
இந்த புதிய மின்சார சட்டம் அமலுக்கு வந்தால் விவசாயிகள், நெசவாளர்கள், சிறுதொழில் செய்வோர், குடிசை தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மின்சாரத்துறையில் 25 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களின் வேலைகளுக்கு ஆபத்து ஏற்படும். இந்த மின்சார சட்டத்தின் மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு துரோகம் செய்கிறார். இது மக்களுக்கு செய்யும் துரோகத்தின் உச்சம் ஆகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.