அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

0
71
This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!
This is AIADMK's next check! Information published by Ma. Subramanian!

அதிமுகவின் அடுத்த செக் இது தான்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தின் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்பொழுது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.அந்தவகையில் மக்கள் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளதா,தடுப்பூசி பணிகள் எந்தவகையில் நடைபெற்று வருகிறது என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்து வருகிறார்.தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்றார்.அப்போது அங்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி கீரனூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ஸ்டாலின் தொடங்கி வைத்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை லெம்பலக்குடியில் சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.அதுமட்டுமின்றி திருமையம் அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.இவருடன் அமைச்சர் ரகுபதி,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மேலும் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியது,மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கிய 3 நாட்களிலே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.சென்ற இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர்.

ஆனால் தற்போது நமது தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதும் இல்லை.ஆயிரம் மெட்ரிக் டன் மேல் தற்போது ஆக்சிஜன் சேமிப்பு உள்ளது என்றார்.புதுக்கோட்டையில் மட்டும் 98% மாற்றுத்திரனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு 68% கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.அதுமட்டுமின்றி நமது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகப்படியான கொரோனா தடுப்பூசி செலுத்தியதாகவும் கூறினார்.மேலும் திமுக ஆட்சி அமைந்த பிறக்கு பி.பி.இ கிட் ரூ.350 யிலிருந்து தற்போது ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல ரூ.90 முதல் வழங்கிய N-90 மாஸ்க் தற்போது ரூ.22 க்கு விற்கப்பட்டு வருகிறது.கடந்த அதிமுக ஆட்சியில் அதிகம் பணம் கொடுத்து வழங்கப்பட்ட மருத்துவ பொருட்கள் அனைத்தும் தற்போது குறைந்து காணப்படுகிறது.அதேபோல கடந்த ஆட்சியில் அதிகம் பணம் கொடுத்து மருத்துவ பொருட்களை வாங்கிய பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.