அமைச்சரான ஒரு நாளில் செந்தில் பாலாஜி செய்த செயல்! டாஸ்மாக் கடைகளில் வந்த மிகப்பெரிய மாற்றம்! 

Photo of author

By Rupa

 

மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி அவர்கள் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்னரே தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், உதயநிதி துணை முதலமைச்சர் ஆவாரா என்று கிசுகிசுக்கப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்து கொள்ளலாம் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கலாம் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

இதையடுத்து கடந்த வாரம் திங்கள் கிழமை செந்தில் பாலாஜி அவர்கள் நிபந்தனை ஜாமீனுடன் சிறையில் இருந்து வெளியே வந்தார். 471 நாட்களக சிறையில் இருந்து பலமுறை ஜாமீன் கேட்டு மனு அளித்தும் அதையெல்லாம் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அடிப்படை உரிமை காரணமாக நீதிமன்றம் செந்தில் பாலாஜி அவர்களுக்கு இந்தமுறை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் துணை முதல்வர் பதவியேற்பு விழா, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆகியவை கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த பதவியேற்பு விழாவில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றார். மேலும் மதுவிலக்கு துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி அவர்களும் பதவியேற்றார். இவருடன் ஆவடி நாசர், கோவி செழியன், ஆர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி அவர்கள் பதவியேற்ற ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

அதாவது டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கணினி மூலம் பில் போடும் நடைமுறையை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன் படி மது பாட்டில்களுக்கு பில் வழங்கும் நடைமுறை முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் ராணிப்பேட்டையில் 7 கடைகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது இந்த நடைமுறையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் கியூஆர் ஸ்கேனர் மூலமாக மது பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள கோடை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வழங்குவார்கள். இதன் மூலமாக மதுபாட்டில்களின் விலையானது கலால் வரியுடன் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு பாட்டில்களில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள லேபிள்களை ஸ்கேன் செய்யும் பொழுது பாட்டில் எந்த கடையில் வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, எந்த பேட்சை சேர்ந்தது, ஆலையில் இருந்து எப்பொழுது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.