நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் பெற்றுள்ள கடனை இளைய மகனான பிரபு அவர்களை அடைக்கும் படி நீதிமன்றத்தில் கேட்ட பொழுது அதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் பிரபு அவர்கள். அவர் நீதிபதிகளிடம் தெரிவித்த காரணங்கள் நீதிபதிகளை மட்டுமின்றி ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனமானது ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்தை நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக சிவாஜி அவர்களின் பேரன் மற்றும் நடிகரான துஷ்யந்த் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இடமிருந்து 3, 74,75,000 பணத்தை கடனாக வாங்கி இருக்கிறார்.
இந்த கடனானது கட்டப்படாமல் விடப்பட்டதாலும், கடன் பெற்ற பொழுது ஒவ்வொரு மாதமும் 30 சதவிகித வட்டியுடன் சேர்த்து அசலையும் அடைத்து விடும்படி கூறிய நிலையில் அதனை சரிவர செய்யாததால் இது வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வாறு வழக்காக மாற்றப்பட்ட நிலையில் அந்த கடன் தொகை 9 கோடியை தாண்டியது. இந்த வழக்கினை விசாரித்த ஹை கோர்ட் நீதிபதிகள் சிவாஜி அவர்களின் வீட்டை ஜப்தி செய்த அதை விற்று அதில் வரக்கூடிய பணத்தை தனபாக்கியம் என்டர்பிரைசஸ் இருக்கு வழங்கச் சொன்னது.
இதனை எதிர்த்து நடிகர் பிரபு அவர்கள் வழக்கு தொடர்ந்து, தான் இதுவரை 1 ரூபாய் கூட வெளியில் கடன் பெற்றதில்லை என்றும் தன்னுடைய அண்ணன் ராம்குமார் அவர்கள் வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுவரை கடனை பெற்று விடாத என்னுடைய சொத்துக்களும் இதில் முடக்கப்பட்டுள்ளது என்றும் தன்னுடைய தந்தையின் வீட்டில் தனக்கும் உரிமை இருப்பதால் அதனை ஜப்தி செய்ய கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்களுடைய அண்ணன் தானே நீங்கள் உங்கள் அண்ணனுக்கு அந்த தொகையை கொடுத்துவிட்டு மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா என நீதிபதி கேட்டதற்கு, என்னால் யாருடைய கடனுக்கும் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் நிறைய இடங்களில் கடன் வாங்கி வைத்திருப்பதால் என்னால் அவருடைய கடன்களை கட்ட முடியாது என்றும் திட்டவட்டமாக நடிகர் பிரபு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.