தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்!

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்!

தாலிபான்கள் சில நாட்களாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.மேலும் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றியும் விட்டனர்.அந்நாட்டு மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆப்கன் குடிமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஞாயிறன்று ஆப்கன் மக்கள்,அரசியல்வாதிகள்,இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் விமானம் மூலம் இந்தியாவின் டெல்லியில் வந்து இறங்கினர்.இவர்கள் மிகவும் கவலையுடனும் விரக்தியுடன் பேசினார்கள்.தங்கள் நாட்டு குடிமக்களின் நிலை இனி என்ன ஆகப் போகிறதோ என பதறினார்கள்.நேற்று விமான சேவையையும் ஆப்கானிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தியது.இந்த சூழலில் அந்த நாட்டில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் அவர்கள் நாட்டை நினைத்து மிகவும் கவலை கொள்கின்றனர்.சண்டிகரில் கல்வி பயிலும் ஆப்கானிஸ்தான் மாணவர்கள் தங்கள் குடும்பம் என்ன ஆகப் போகிறதோ தங்கள் நட்டு மக்கள் என்ன ஆகப்போகிறார்களோ என கவலையுடன் தெரிவித்தனர்.எங்கள் கனவு,வருங்காலம் என்ன ஆகப்போகிறதோ எனவும் கவலைப்பட்டார் அப்துல் மொனிர் காகர் என்பவர்.இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆப்கான்-ஈரான் இடையேயான உறவுகள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை படித்து வருகிறார்.இவரது குடும்பம் காபூலில் வசித்து வருகிறது.

மேலும் பர்வானா ஹுசைனி என்ற பெண் கடந்த நான்கு வருடங்களாக சண்டிகரில் முதுகலை படிப்பை பயின்று வருகிறார்.இவரின் தந்தை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பாம்யன் நகரத்தில் விவசாயம் செய்து வருகிறார்.தாலிபான்கள் இப்போது பெண்களை தங்கள் வீடுகளில் இருந்து கடத்துவதாக பர்வானா சொல்கிறார்.அவரது சொந்த ஊர் மூன்று நாட்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்டது.கடந்த நான்கு அல்லது ஐந்து வருடங்களில் பெண்கள் சுதந்திரமாகிவிட்டனர்.அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் சுதந்திரம் குறித்து நான் கவலைப்படுகிறேன்.இப்போது என்னைப் போன்ற பெண்கள் தாலிபான்கள் நகரமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது.ஐக்கிய நாடுகள்,அமெரிக்கா மற்றும் இந்தியா தலையிட்டு ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை காப்பாற்றும் என்று அவர் நம்புகிறார்.

Leave a Comment