கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்!! சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள்!
திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் கூத்தப்பார், காட்டுப்புதூர், பாலகிருஷ்ணம்பட்டி, பூவலூர், எஸ்.கண்ணனூர், புள்ளம்பாடி போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாணவர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதுமான வசதி இல்லை ஏற்படுத்தித் தருமாறு கோஷங்களுடன் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடத்திற்கு விரைந்து வந்து குறைகளை கேட்டார் அப்போது மாணவர்கள் கல்லூரியில் எங்களுக்கு போதுமான அளவிற்கு கழிப்பறைகள் வசதி இல்லை மற்றும் குடிநீர் வசதியும் இல்லை, சரியான போக்குவரத்து வசதியும் இல்லை இந்த அடிப்படை வசதிகளை எங்களுக்கு செய்து தர வேண்டும் என்று போலீச இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் வேண்டுகோள் வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விரைவில் இதற்காக தீர்வு காணப்படும் தற்போது சாலை மறியலை கைவிடமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் மாணவர்களோ தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இந்த தகவலை தாசில்தார் சண்முகப்பிரியா மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சண்முகப்பிரியா மற்றும் அதிகாரிகள் மாணவர்களிடம் பல மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.