எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

0
231

எந்த மாதத்தில் எந்தெந்த காரியங்கள் செய்யலாம்!! என்ன இந்த மாதங்களில் வீடு குடியேற கூடாதா??  

** சித்திரை, வைகாசி, ஆனி, தை, ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வர். மற்றும் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.

**சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, ஆகிய மாதங்களில் வீடு கட்டும் வேலையை தொடங்கினால் தடையில்லாமல் விரைவாக முடியும். அதேபோல் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கிணறு வெட்டினால் அது எப்போதும் வற்றாது.

** புரட்டாசி மாதத்தில் வரும் விஜயதசமி அன்று கல்வி கற்றுக்கொள்ள தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிட்டும். அது வாழ்க்கைக்கு சிறப்பாக பயன்படும்.

** ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது.

** ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, மத்தியான வேளை, சாயங்கால வேளை, புது வருஷ பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சங்கராந்தி, துவாதசி, மற்றும் பித்ரு திதி நாட்களில் துளசியை பறிக்கக் கூடாது.

** அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் இரவு நேரத்தில் தெய்வ சிலை அல்லது படத்தின் மீது வாசனை திரவியங்களை தேய்த்தால் வீட்டில் தெய்வ சக்தியையும், தெய்வ நடமாட்டத்தையும் உணர்வீர்கள்.

ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் எந்த சுப நிகழ்ச்சியும் செய்யக்கூடாது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆடியில் புது வீடு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யலாமா?? திருமணம் செய்யலாமா என கேட்கின்றனர்.

ஆடி, புரட்டாசி, மார்கழி, மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். கோவில்களில் விழாக்கள் கலை கட்டும். ஆடி மாதம் அம்மனுக்கும், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். மார்கழி மாதம் தனூர் மாதம் வழிபாட்டிற்கு உரிய மாதம்.

** ஆடி மாதத்தில் வாஸ்து நாளில் புது வீடு பால் காய்ச்சலாம். அதே போல் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நிலம் தொடர்பான காரியங்களை தொடங்கி செய்யலாம்.

** சந்திராஷ்டமம், கரி நாளிலும் சுப காரியங்கள் கூடாது. வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதினால் புதிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்பவர்கள் தங்களின் சுய ஜாதகத்தில் ஆராய்ந்து புது வீடு குடி போவது நல்லது.

 

Previous articleஅசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா??  இந்த பானத்தை குடிங்க!! 
Next articleவேலை கிடைக்க இல்லைன்னு கவலைப்படாதீங்க!! இந்த செயலியை இருந்தா போதும் பணிகள் எல்லாம் உங்களுக்குத்தான்!!