ஈரமான முடியில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்.. முடி உதிர்வுக்கு பாய் பய் சொல்லிவிடலாம்!

Photo of author

By Selvarani

ஈரமான முடியில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்.. முடி உதிர்வுக்கு பாய் பய் சொல்லிவிடலாம்!

பெண்ணிற்கு அழகு கூந்தல் என்று பலர் சொல்வார்கள். அவ்வாறு இருக்கும் நம் முடிக்கு பல பிரச்சனைகள் வருவதுண்டு அதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, முன்கூட்டிய நரைத்தல், முனைகள் பிளவு, வறட்சி போன்றவை பல பிரச்சனைகளுக்கு நம் தலைமுடி ஆளாகிறது. ஆனால் இவை அனைத்தும் நாம் செய்யும் தற்செயலான தவறுகளால் வருகிறது.

குளிர்காலம் முடி பராமரிப்புக்கு முக்கியமான காலம் என்று கூறப்படுகிறது, குளிர்காலத்தில் தான், முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொடர்பான பிரச்சினைகளும் தொடரும் என்பதால் நாம் அந்த நேரங்களில் முடியை பொறுப்புடன் கவனிப்பது நல்லது.

பெரும்பாலானோர் தலை முடி ஈரமாக இருக்கும் போதே சீவுவார்கள். இது தவறு, இப்படி ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்தும் போது, முடி அதிகமாக சேதமடைந்து கொட்ட தொடங்கும்.

எனவே உங்கள் முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால், முடி முற்றிலும் உலரும் வரை காத்திருந்து பின் சீவுங்கள்.

தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்துவதற்கு நாம் பெரும்பாலும் துண்டால் துடைப்போம். ஆனால் இனிமேல் அப்படி முடியை உலர்த்தாதீர்கள். ஏனெனில் இச்செயலால் தலைமுடி அதிகம் உடையும் மற்றும் அதிக சிக்கு விழும். அதனால் மென்மையான துணியால் தலைமுடியை ஒத்தி எடுங்கள்.

முடிந்தவரையிலும் கைவிரல்களால் கோதிவிட்டு, காற்றில் உலர விடுங்கள். அடுத்து நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, ஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. அப்படி சீவும்போது முடி உதிர்தல் அதிகமாகும்.