விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

Photo of author

By Kowsalya

தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் அந்தத் திரியை என்ன செய்வது என்று தெரியாமல் பலர் இருப்பார்கள்.

விளக்குத் திரியை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றவில்லை என்றால் அந்த திரி பச்சை நிறமாக மாறிவிடும் அப்படி மாறுவது நல்லதல்ல.

அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள்.

திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விடுவது தான் நல்லது. வாயால் ஊத கூடாது. ஒற்றை திரியாக போடக் கூடாது. எப்போதும் இரண்டு திரிகளை இணைத்து தான் போட வேண்டும்.

தினமும் திரியை மாற்றுபவர்கள் ஆக இருந்தால் அந்தத் திரியை ஒருமுறை பயன்படுத்திவிட்டு அதை தனியாக பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் என்ன செய்கிறீர்கள் என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார சொல்ல வேண்டும்.

பின்னர் அப்படியே அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழித்து விடுங்கள்.

தூபக்காலை சுற்றி விட்டு வெளியே வைத்து அதை எரிய விடவேண்டும்.

முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் இந்த தீயில் வெந்துவிடும். திரிகள் கருகி கரியாகி முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். இனி ஒருபோதும் திரியை தூக்கி எறியாதீர்கள்.