சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிக முக்கியமாக விளங்குவது எலும்பு. அந்த எலும்பானது நல்ல வலுவாகவும், தேய்மானம் அடையாமலும் இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். குறிப்பாக 30 வயதை கடந்து விட்டாலே நமது எலும்பானது வலு விழுந்து தேய்மானம் அடைய தொடங்கிவிடும். எனவே அனைவருமே எழும்பிற்கு தேவையான சத்துக்களை அவ்வபோது கொடுத்தால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி 30 வயது வரை எலும்பானது வலுவாகவும் வளர்ச்சி பருவத்திலும் இருக்கும். ஆனால் அந்த 30 வயதை கடந்த பின்னர் எழும்பானது தேய்மானப் பருவத்திற்கு மாறிவிடும். முப்பது வயதை கடந்த அனைவருக்குமே ஒரு எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் எடுத்தால் எழும்பானது சிறிதாவது தேய்மானம் அடைந்திருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு அதிகமான தேய்மானம் இருக்கும். அத்தகையவர்கள் எந்த வகையான உணவை எடுத்துக் கொண்டால் அந்த தேய்மானத்தை குறைக்க முடியும், அந்த தேய்மான பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை குறித்து காண்போம்.
1.) சூரிய ஒளி:
மிகவும் எளிதாகவும் எந்த செலவும் இன்றி நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த சத்தானது விட்டமின் D .அது நமக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கிறது. இந்த விட்டமின் D ஆனது நமது எலும்பை வலுப்படுத்தவும், கால்சியம் சத்தினை நமது உடல் முழுவதும் பரவச் செய்வதற்கு உதவியாகவும் இருக்கிறது. எனவே தினமும் காலை இளம் வெயிலில் ஒரு 10 நிமிடம் நிற்பதன் மூலம் நமது எலும்புகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
2.) விட்டமின் C:
எலும்பு தேய்மானம் உள்ள ஒருவருக்கு விட்டமின் C சத்து அதிகம் உள்ள பொருட்களை மட்டுமே உணவாக கொடுத்து அந்த தேய்மானத்தை சரி செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு விட்டமின் C உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது ஒருவருடைய எலும்புகள், தசைகள், தசை நார்கள், குறுத்தெலும்புகள் இவை அனைத்தும் வலுப்பெறும். எனவே விட்டமின் C உள்ள உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
3.) விட்டமின் E :
விட்டமின் E ஆனது ஆரஞ்சு மற்றும் தக்காளி பழம் போன்றவைகளில் உள்ளது. இந்த விட்டமின் E இன் குறைபாடு என்னவென்றால், விட்டமின் E உள்ள பொருட்களை சமைத்தால் அந்த சத்தானது வெளியேற்றப்பட்டுவிடும். எனவே சமைக்காத உணவுப் பொருட்கள் ஆன விட்டமின் E உள்ள பாதாம், வால்நட் போன்றவைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது 30% எலும்பு தேய்மானம் அடைவதை தவிர்க்கலாம்.
எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இத்தகைய சத்துக்களை எடுத்துக் கொண்டு எலும்பு தேய்மானத்திலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மாறாக எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் ஏதேனும் வலி ஏற்பட்டால் அதற்கு வலி நிவாரணம் மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து, அதற்கு பதிலாக இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், இரண்டு சிட்டிகை மிளகு தூள் ஆகியவற்றை போட்டு கொதிக்க வைத்து அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு போட்டு ஒரு டீ போல எடுத்துக் கொண்டால் வலி சற்று குறைவாகவும், எலும்பு தேய்மானத்தை குறைக்கவும் உதவும்.
அதேபோன்று அதிக அளவு தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். நமது உடம்பை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது எலும்பு தேய்மானத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.