தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஆட்டம்! இந்திய அணியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

0
176

பரபரப்பான தென்னாப்பிரிக்கா இந்தியா புலித்த அணி இலக்க இடையிலான டி20 தொடர் இன்று முடிவுக்கு வருகிறது இன்று மாலை 7 மணியளவில் இந்த ஆட்டம் ஆரம்பமாக உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது தொடரை வென்று விட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் விதமாக இன்றும் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி திட்டம் வகுத்துள்ளது.

இன்று இந்திய அணியில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் விராட் கோலி இன்று நடைபெறும் போட்டியில் விளையாடவில்லை. இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்படுகிறது.

அதேபோன்று தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் அவர்களும் இன்று விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே தொடக்க ஆட்டக்காரர்கள் இன்றைய தினம் ஆட்டத்தில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் இன்று சூரியகுமார் அல்லது ரிஷப் பண்ட் உள்ளிட்ட இருவரில் யாராவது ஒருவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

  இந்திய அணியின் டாப் ஆர்டர் ஒட்டுமொத்தமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூரியகுமார், ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் இன்றைய தின ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு உள்ளன.

இதைத் தவிர்த்து இந்தியா அணியில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி சிராஜ் என்று களமிறங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல அஸ்வினுக்கு ஓய்வு வழங்கப்படலாம்.

அல்லது ஹர்ஷல் பட்டேலுக்கு இன்று ஓய்வு கொடுக்கப்படலாம். இதனால் பௌலிங் ஆர்டரிலும் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அர்ஷிதீப் சிங்,அக்சர் படேல், தீபக் சாகர், முகமது சிராஜ் உள்ளிட்டோர் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளனர்

Previous articleபெரியார் பிறந்த மண்ணில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பை பார்த்து கதறும் திருமாவளவன்!
Next articleஅடேங்கப்பா இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கிடுகிடு உயர்வு!!