சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தீபக்கும் நட்சத்திராவும் என்ன பண்ண  போறாங்க?? மாகாபாவுக்கும் பிரியங்காவும் வேலை இல்லயா??

Photo of author

By CineDesk

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தீபக்கும் நட்சத்திராவும் என்ன பண்ண  போறாங்க?? மாகாபாவுக்கும் பிரியங்காவும் வேலை இல்லயா??

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது அறிந்ததுதான். விஜய் டிவிக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் உலக அளவில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும். இந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியை பெற்று வருகிறது. இதில் ஒரு சீசன் பெரியவர்கள் அடுத்த சீசனில் சிறியவர்கள் என மாறி மாறி பங்கு பெற்று வருவார்கள். மேலும் இதில் பங்கு பெற்ற அனைவருமே ஏதாவது ஒருவிதத்தில் சினிமாவில் படங்களில் பின்னணி பாடகர்களாக பணியாற்றி வருவார்கர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஏழாவது சீசனை முடித்து 8வது சீசன் ஆரம்பித்து உள்ளது. இதில் பல திறமையான பாடகர்கள் அவரது பாடல் திறமைகளை உலகிற்கு காட்டிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் மாகாபா மற்றும் பிரியங்கா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர். இவர்களின் காம்போ உலக அளவில் பிரபலமானது. இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கும் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் இவர்களின் ரசிகர்கள் இவருக்கு உலக அளவிலான ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் நடைபெற உள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட நாடகத்தின் நடிகர் மற்றும் நடிகை பங்கேற்றுள்ளனர். முன்னணி சின்னத்திரை பிரபலங்களான நடிகர் தீபக் மற்றும் நடிகை நட்சத்திர நாகேஷ் ஆகியோர் தான். இவர்கள் இணைந்து நடிக்கும் சீரியலின் பெயர் தமிழும் சரஸ்வதியும். இது தொடர்பாக இவர்கள் இருவரும் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கெஸ்டாக பங்கேற்றுள்ளனர்.