கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

0
265
#image_title

கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் தான்! பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பேச்சு!

பாஜக கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் என்று உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியுள்ளார்.

நேற்று(மார்ச்31) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்திரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அப்போது நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரத்தில் பேசத் தொடங்கினார்.

அப்பொழுது நரேந்திர மோடி அவர்கள் “எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி ஊழல் செய்கின்றது. எவ்வளவு பெரிய ஊழல்வாதிகளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டை கொள்ளையடித்தவர்கள் நம்முடைய நாட்டைதிருப்பித் தர வேண்டும்.

எங்களுடைய அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தயாராகி வருகின்றது. புதிய அரசு பதவி ஏற்ற பிறகு முதல் 100 நாட்களில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்த பணிகள் நடந்து வருகின்றது. என்னுடைய நண்பர்களே கடந்த 10 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராகவும் ஊழல் செய்பவர்களுக்கு எதிராகவும் நம்முடைய அரசு பெரிய போராட்டம் நடத்தி வருகின்றது. நான். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறேன். இது பல பேரை பதற்றம் அடைய செய்துள்ளது.

தமிழகத்தின் கடலோரம் உள்ள கச்சத் தீவானது தேசிய பாதுகாப்பின் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது மிகவும் முக்கியமான ஒன்று. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பொழுது கச்சத் தீவு நம்முடையதாக இருந்தது. கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த பகுதியாக அப்பொழுது இருந்தது. அதன் பிறகு 4 அல்லது 5 சதாப்பங்களுக்கு முன்னர் கச்சத் தீவை இந்தியாவில் இருந்து துண்டிக்கப்பட்டது என்று காங்கிரஸ் அரசு கூறியது.

மீரட்டுக்கும் எனக்கும் நெருங்கிய நல்ல தொடர்பு இருக்கின்றது. 2014ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரங்களை இங்கு இருந்து தான் தொடங்கினேன். அதே போல 2024ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இங்கிருந்து தான் தொடங்குகிறேன்.

இந்த தேர்தல் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது. வளர்ச்சியடைந்த இந்தியாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகும். கடந்த 10 வருடங்களில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான் நண்பர்களே.

தற்பொழுது நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் இரண்டு குழுக்களுக்கு இடையேயான போட்டி ஆகும். ஒரு பக்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும் குழுக்கள் மற்றொரு பக்கம் ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கும் குழுக்கள்.

இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினால் மோடியை பயமுறுத்தலாம் என்று நினைக்கிறார்கள். என்னுடைய நாடு என்னுடைய குடும்பம் என்று நான் ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றேன். அதன் காரணமாகத்தான் பல ஊழல்வாதிகள் தற்பொழுது சிறையில் இருக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது சிறு முதலீட்டாளர்கள் வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடாக பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊழல்வாதிகள் முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து 17000 கோடிக்கே மேல் பணத்தை யாரிடம் இருந்து தவறாக பெறப்பட்டதோ அவர்களுக்கே அந்த பணம் திரும்பி கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது நடக்காது சாத்தியமற்றது என்று பலரும் கருதினர். இருந்தாலும் இப்பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளுக்காக முத்தலாக் சட்டத்தையும் நாங்கள் தற்பொழுது கொண்டு வந்துள்ளோம்’ என்று அந்த பிரச்சாரத்தில் நரேந்திர மோடி கூறினார்.

Previous articleஇன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!
Next articleகார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு! ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை !