ஏடிஎம் மிஷினில் உங்களது பணம் மாட்டிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Gayathri

சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும் பொழுது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும் ஆனால் இயந்திரத்தில் பணம் வராது.

இவ்வாறு நடக்கும் பொழுது நமது வங்கி கணக்கில் 5 நாட்களுக்குள் மீண்டும் அந்த தொகை வந்துவிடும். ஒருவேளை அவ்வாறு வராமல் போய்விட்டால் ஐந்து நாட்களை தாண்டிய ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 100 வீதம் இழப்பீட்ட தொகை வழங்கப்படும்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து உங்கள் பணம் கையில் வராமல் போனால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை :-

முதலில் நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஏடிஎம் பரிவர்த்தனை ரசீதை எடுத்து வைக்க வேண்டும். சில நேரங்களில் சில ஏடிஎம்களில் ரசீது வராது. அப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்தியைக் காட்ட வேண்டும்.

பிறகு, உங்களுடைய வங்கிக்கு உடனடியாக கஸ்டமர் கேர் மூலம் புகார் அளிக்க வேண்டும். உங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரிந்தால் மட்டுமே அவர்கள் அதனை மீண்டும் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப முனைவார்கள்.

நீங்கள் ஆதாரங்கலை வழங்கிய பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கி டெபிட் செய்யப்பட்ட தொகையைத் திருப்பித் தரவில்லை என்றால் முதலில் நீங்கள் வங்கியின் உள் ஒம்புட்ஸ்மேன் அதிகாரியை அணுக வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு பிரத்யேக அதிகாரி மற்றும் உள் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் உள்ளது. வங்கிக்கு எதிராக புகார் செய்ய அந்த வங்கியின் கீழ் உள்ள குறைதீர்ப்பாளரின் நோடல் அதிகாரியை நீங்கள் அணுகலாம்.

அங்கு உங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இணையதளம் மூலமாக இந்தியன் ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் அமைப்பை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் கண்டிப்பாக வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட உங்கள் பணம் மீண்டும் வங்கி கணக்கிருக்கு வந்து சேரும்.