வாட்ஸ் ஆப் டௌன் ; எந்த பதிலும் சொல்லாத நிறுவனம் ! உலகளவில் ட்ரண்ட்டான ஹேஷ்டேக் !!
வாட்ஸ் ஆப்பில் இன்று காலை முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப முடியாமல் பிரச்சனைகள் எழுந்துள்ளன.
வாட்ஸ் ஆப் மெஸெஞ்சர் இன்று உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப் படும் செயலியில் ஒன்றாக உள்ளது. இந்த செயலியின் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், தொடர்புகள் மற்றும் தங்கள் இருப்பிடம் ஆகியவற்றைப் பிறருக்கு அனுப்பலாம்.
அதுமட்டுமில்லாமல் இணைய வசதி இருந்தால் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ அழைப்புகளையும் செய்யும் வசதி உள்ளது. இத்தனை வசதிகள் இருப்பதால் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது.
இன்று காலை முதல் டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் வாட்ஸ் ஆப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாமல் முடக்கம் ஏற்பட்டது. இதுபற்றி வாடிக்கையாளர்கள் பலரும் முறையிட்டனர். ஆனால் வாட்ஸ் ஆப் எந்த பதிலும் தெரிவிக்க வில்லை.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் டௌன் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இந்த பிரச்சனைகள் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.